×

பாலக்காடு மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் மகிழ்ச்சி

பாலக்காடு : ஆண்டுதோறும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தங்கள் வீடுகளின் முன்பாக அத்தப்பூக்கோலம் அமைத்து மாகபலி மன்னரை வரவேற்று அறுசுவை உணவுகள் படைத்து படையலிட்டு பூஜைகள் செய்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் வீடுகளின் முன்பாக கடந்த அத்தம் நட்சத்திர நாள் முதல் திருவோணம் நாள் வரையில் அத்தப்பூக்கோலம் போட்டு, மாகபலி மன்னரை வரவேற்று வருகின்றனர். மேலும் வீடுகள்தோறும் களிமண்ணால் செய்த மாகாபலி உருவ பொம்மைகள் செய்து செண்டுமல்லி, வாடாமல்லி, தாமரை ஆகிய மலர்கள் சூட்டி அலங்கரித்து வழிபாடுகள் செய்தனர். அனைத்து தரப்பினரும் பாகுபாடின்றி புத்தாடைகள் ஜரிகை சேலை, வேஷ்டிகள் அணிந்து கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோயில்களிலும் முதல்நாள் பண்டிகை நாளான நேற்று உத்திராடம் நட்சத்திரம் நாளில் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஓணம் பண்டிகையொட்டி தமிழகத்தின் அண்டையில் கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் மலம்புழா, காஞ்சிரப்புழா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக்கழகம் சார்பில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் பாலக்காட்டில் சுற்றுலா தலங்களை வண்ண மின்னொளி விளக்குகளால் அலங்கரித்து இருந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஓணம் பண்டிகையையொட்டி தன்னார்வத்தொண்டு நிறுவனங்களிலும், கிளப்களிலும் கலைநிகழ்ச்சிகள், உறியடி, கயிறு இழுக்கும் வலு போட்டிகள், ஆடல், பாடல்கள் என மகாபலி மன்னர் வேடங்கள் அணிந்து மக்கள் கொண்டாடினர். கேரளாவின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான திருவாதிரைக்களி, ஓட்டம் துள்ளல், சாக்கியார் கூத்து, களரி பயிற்று, புலியாட்டம், படகுப்போட்டி  தண்ணீரில் ரேக்ளா பந்தயம் ஆகியவை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. கேரள மாநிலம், திருச்சூரில் நாளை புலியாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவையடுத்து நடக்கும் புலியாட்டம் நாளை (10ம் தேதி) மாலை 4 மணியளவில் நடக்கிறது. திருச்சூரில் ஆண்கள் தங்கள் வயிறுகளில் புலி உருவம் வரையந்து, செண்டை வாத்தியத்திற்கேற்ப பாலகாடு மாநகராட்சி வீதிகளில் நடனமாடி வீதியுலா வந்தனர். இதனை வேடிக்கை பார்க்க ஏராளமான மக்கள் உள்ளூரிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் திரண்டு வந்திருந்ததால் பாலக்காடு மாவட்டம் ஓணம் பண்டிகை களைகட்டி காணப்பட்டது….

The post பாலக்காடு மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம் அத்தப்பூ கோலமிட்டு மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Palakkad district ,Oonam ,Afipu ,Kolamitthu ,Palakkad ,Onam ,Kerala ,Magabali ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...